திங்கள், 8 அக்டோபர், 2012

ஒளி வேண்டும்

 ஒளி வேண்டும் அனைவர்க்கும்
  வழி வேண்டும் அனைவர்க்கும்

செவ்வாய், 10 ஜனவரி, 2012

புத்தாண்டு வாழ்த்த்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்த்கள் 2012

செவ்வாய், 13 டிசம்பர், 2011

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு

இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

செவ்வாய், 29 டிசம்பர், 2009

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
* இருக்கிறார் என்பவர்களை விட்டு விடுவோம் - அது அவர்கள் நம்பிக்கை
* இல்லை என்பவர்கள் - உண்மையிலேயே கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியவில்லை என்பவர்களையும் விட்டுவிடுவோம் - அவர்கள் என் கட்சி
* இல்லை என்பவர்கள் - கடவுள் இல்லை என்பவர்களுக்கு மட்டும் தான் இந்த விவாதம்

சுவத்துல இருக்கிற பல்லிக்கு அதன் பக்கத்தில் இருக்கிற பல்ப் ஏன் எரியுது? எப்படி எரியுதுனு தெரியுமா? அல்லது விளக்கித்தான் புரியவைக்க முடியுமா?"

நான் சொல்ல வரும் விஷயமும் அதுதான். எப்படி ஐந்தறிவுள்ள ஒன்றால் ஆறறிவு படைத்த நம் செயல்களுக்கு விளக்கம் சொல்ல முடியாதோ? அதே போல் ஏழறிவு படைத்த கடவுள் செயல்களை நம்மால் கண்டு தீர்மானிக்க முடியாதல்லவா?

வரிசையாக ஊர்ந்து செல்லும் எறும்புகளை நாம் காலால் மிதித்து அழிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவை என்ன நினக்கும் (நினைத்தால்!) - இப்படி மனிதர்கள் என்ற இனம் ஒன்று உண்டு, நம்மால் அவர்களுக்குத் தொல்லை அதனால் நம்மை அழிக்கிறார்கள் என்று நினைக்குமா? தன் அறிவு நிலையைத் தாண்டி அவைகளால் சிந்திக்க முடியாது அல்லவா? ஆறறிவு பெற்ற ஒரு விலங்கு (மனிதன்தான்) இருக்கும் என்று அவை சிந்திக்குமா?

ஒரு எருமைக்கு எப்படியோ நம் தொலைக்காட்சி பற்றித் தெரிந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம் அதை இன்னொரு எருமைக்கு புரியவைக்க முடியுமா? அது எப்படிடா லண்டன்ல நடக்கிற விளையாட்டை நம்ம ஓனரு இங்கே லைவா பார்ப்பாரு? எவ்ளோ தூரம்?னுதான வாதாடும்.

கடவுள் இருக்கலாம், நமக்கு எப்படி டெக்னாலஜியோ கடவுளுக்கும் வேறு ஒரு டெக்னாலஜி இருக்கலாம், நமக்கில்லாத ஏழாவது அறிவு பெற்றிருக்கலாம். அதை வைத்து நமக்கு விளையாட்டுக்காட்டலாம்.

யாரும் தொலைக்கவில்லை ! ஆனால் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் ….. நிம்மதியை..!

ஆனால் மனிதன் மட்டும் கடவுளையோ …
இன்னும் யார் யாரையோ நம்பியே வாழ்கிறான் …

தன்னைத்தவிர!

“மேயச்செல்லும் மாடு தன் கொம்பில் வைக்கோலைக் கட்டிச்செல்வதில்லை”

ஆனால் மனிதன் மட்டும் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளில் பாதியைத் தொலைத்துவிடுகிறான்.

ஆசை அவனை ஆட்டிவைக்கிறது.

நாம் எதிர்பார்ப்பது போல் வாழ்க்கை எப்போதும் அமையாது..

எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை!

வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்தால் இன்பத்தின் மதிப்புத் தெரியாது,
வெயிலின் அருமை நிழலில் தெரிவது போல இன்பத்தின் அருமை துன்பத்தில் தான் தெரியும்.

இன்பம் துன்பம் என்பதற்கான அளவீடு அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலேயே அமைகிறது.

துன்பம் நாம் வரவழைத்துக்கொள்வது !
இன்பம் எப்போதும் நம்மோடு இருப்பது !

யாரும் தொலைக்கவில்லை !

ஆனால் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் …..

நிம்மதியை..!

செவ்வாய், 24 நவம்பர், 2009

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

ஊட்டச் சத்துக்கள்


1. கார்போஹைட்ரேட்கள் - Carbohydrates

2. புரதங்கள் - Proteins
3. கொழுப்பு - Fat
4. வைட்டமின்கள் - Vitamins
5. தாதுப்பொருட்கள் - Minerals
6. தண்ணீர் - Water